சிங்கையின் ரேஃபில்ஸ்

இப்பொழுது நான் வெளியிடும் புகைப்படத்தின் ஒரிஜினல் (பிற்சேர்க்கை செய்யப்படாத) படத்தையும் வெளியிடுகிறேன். இதைப் பார்ப்பதற்கு உங்கள் மவுசை இந்தப் படத்தின் மீது சிறிது நேரம் வைத்திருங்கள் உடனே ஒரிஜினல் படம் தோன்றும் மவுசை வெளியே நகட்டினால் பிற்சேர்க்கை செய்யப்பட்ட படம் தோன்றும். இதற்கு ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் உபயோகப்படுத்தியுள்ளேன்.
இந்தப் படம் சிங்கையின் மிக முக்கிய ரேஃபில்ஸ் விடுதி. முந்தைய படத்தைப் போல் இல்லாமல் +1, 0, -1 என்று ஆட்டோ பிராக்கட்டிங் செய்யப்பட்ட படம். இது மூன்று படத்தை சேர்த்து, Photomatix pro உபயோகப்படுத்தி HDR செய்திருக்கிறேன். பார்க்க HDR போலில்லாமல் சாதாரணப் படம் போல் வர முயற்சி செய்திருக்கிறேன். இதற்கு முந்தைய படம் இந்தப் படம் ஒரே ஒரு படத்தில் இருந்து HDR செய்யப்பட்டது (Pseudo HDR). இதிலும் மவுசை நகட்டி ஒரிஜினல் படத்தை பார்க்கலாம்.
0 comments:
Post a Comment